சிறப்பாக நடைபெற்று முடிந்த “கவியும் நாட்டியமும்” பரதநாட்டிய போட்டி..!!

சிறப்பாக நடைபெற்று முடிந்த "கவியும் நாட்டியமும்" பரதநாட்டிய போட்டி..!!

தமிழ் மொழி விழாவை ஒட்டி, ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது.

இந்தப் போட்டி பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நற்பணி மன்றத் தலைவர் திரு. ரவீந்திரன் கணேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருவாட்டி ரஞ்சனி ரங்கன் மற்றும் திருவாட்டி பிரமிளா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

முதல் பிரிவு 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தனிநபர் போட்டியாகும்.

இரண்டாவது பிரிவு 19 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களுக்கானது.

மூன்றாவது பிரிவு குழுக்களாகப் போட்டியிடும் நடனக் கலைஞர்களுக்கானது.

நடனக் கலைஞர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு மட்டுமே நடனமாட வேண்டும் என்பது போட்டி விதிகளில் ஒன்றாகும்.

கூடுதலாக, நடனமாடுவதற்கு முன், அவர்கள் அதை தமிழில் விளக்க வேண்டும்.

நடனக் கலைஞர்களுக்கு அவர்களின் நடனத் திறனுக்காக மட்டுமல்லாமல், தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டன.

12 முதல் 18 வயது வரையிலான பிரிவில் சக்தி நுண்கலை கூடத்தைச் சேர்ந்த மேகனா போசா முதல் பரிசை வென்றார்.

19 முதல் 26 வயது வரையிலான பிரிவில் அப்சரஸ் கலைப் பள்ளியைச் சேர்ந்த பிரியா ரமேஷ் முதல் பரிசை வென்றார்.

குழு பிரிவில் சக்தி நுண்கலைக் கூடம் முதல் பரிசை வென்றது.

தமிழை மொழியை ஊக்குவிப்பதற்காக ஐந்தாவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.