அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவான் காண்டாமிருகம்!! புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குட்டி!!

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவான் காண்டாமிருகம்!! புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குட்டி!!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள உஜுங் குலோன் தேசிய பூங்காவில் புதிய ஜாவான் காண்டாமிருகக் குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் அழிந்து வரும் பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

தேசிய பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள 126 கேமராக்களில் ஒன்றில் அந்த குட்டி அதன் தாயுடன் நடமாடுவது பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த காண்டாமிருகக் குட்டியின் வயது 3 முதல் 5 மாதங்கள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த காண்டாமிருக குட்டியின் பாலினம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த அரிய வகை காண்டாமிருகங்கள் ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது இந்தோனேசியாவில் உள்ள தேசிய பூங்காவில் 82 அரிய ஜாவான் காண்டாமிருகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.