ஆஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர், 2019 ஆம் ஆண்டில் Christchurch-ல் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 51 பேர் உயிரிழந்தனர் மற்றும் அதிக எண்ணிக்கையிலானோர் காயமடைந்தனர்.
மேலும், அந்த நபர் தாக்குதலுக்கு முன்பு இனவெறி குறித்த அறிக்கையை வெளியிட்டதாகவும், தாக்குதலை facebook இல் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது.
நியூசிலாந்தின் இந்த மோசமான சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணை, அக்டோபர் 24ஆம் தேதி அன்று தொடங்கி 6 வாரங்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணை மூலம் தாக்குதல் தொடங்கிய பிறகு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இது போன்ற இறப்புகள் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு, ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.