அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்?

ஒரு நாள் விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிராக இரண்டு பிரிட்டிஷ் பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலகட்டம்.பிரிட்டிஷ் மக்களின் மனநிலை என்னவென்றால்,தமிழர்கள் அனைவரும் அறிவற்றவர்கள் என்று நினைத்திருந்தனர்.

விவேகானந்தர் எப்போதும் கசங்கிய ஆடைகளை அணிந்து இருப்பார் . கையில் உள்ள வாட்ச் மட்டும் அதிக விலை உள்ள தனக்கு பிடித்த ஜெர்மன் வாட்சை அணிந்திருப்பார்.ரயிலில் பயணித்த அந்த இரண்டு பிரிட்டிஷ் பெண்களும் அவர் அணிருந்த வாட்சை கவனித்தனர். விவேகானந்தரிடம்,“என்ன இந்தியன் உனக்கு எதற்கு இந்த வாட்ச்?, அதை கழட்டி எங்களிடம் கொடுத்து விடு!! என்று விவகாரமான பேச்சில் ஈடுபட்டனர்.அத்தோடு அவரிடம் இதை நீ கழட்டி எங்களிடம் தரவில்லை என்றால், எங்களது கையைப் பிடித்து இழுத்தாய் என்று போலீஸிடம் புகார் அளித்து விடுவோம் என்று கூறினர்.

ஆனால்,விவேகானந்தர் எதுவும் கேட்காதது போல், கண்டுகொள்ளாமல் இருந்தார்.அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவரிடம் உனக்கு என்ன காது கேட்காதா??? என்று சைகை யில் கேட்டனர். அதற்கு விவேகானந்தரும் எனக்கு காது கேட்காது என்று சைகை மொழியில் தெரிவித்தார். என்னிடம் நீங்கள் எதை சொல்வதா இருந்தாலும் எழுதி தாருங்கள் என்றார். உடனே அந்த இரண்டு பிரிட்டிஷ் பெண்களும் ஒரு தாளில்,“நீ கட்டியிருக்கும் வாட்சை கழட்டி எங்களிடம் தரவில்லை என்றால், எங்களை கையை பிடித்து இழுத்தாய் என்று போலீசிடம் புகார் அளிப்போம்” என்று எழுதி அவரிடம் கொடுத்தனர்.

அதை பெற்று கொண்டவுடன் தன் மௌனத்தை கலைத்தார்.இப்பொழுது போலீஸிடம் புகார் அளியுங்கள் என்று கூறினார். அவர்கள் இருவரும் கதி கலங்கி விட்டனர். அவரின் இந்த செயல் மூலம் அவர்களுக்கு பாடம் புகட்டினார்.

“உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன” – விவேகானந்தர்.