கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!!

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் செமி ஃபைனல் சுற்று ஜூன் 27 (இன்று) கயானா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டியில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான நடந்து சாம்பியன் இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கிறது. எனவே 2022 டி20 உலக கோப்பையில் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா இந்த முறை இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக உள்ளது.

இந்நிலையில், போட்டி நடைபெறும் கயானா மைதானம் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கு ஏற்றதாக இருக்கும் என முன்னாள் வீரர் ராபின் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அடில் ரசித், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய 2 பந்துவீச்சாளர்களை இந்தியா திறம்பட எதிர்கொண்டால் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி வெற்றிபெற முடியும் என்றும் அவர் கூறினார்.அண்மையில் பேட்டியளித்த அவர்,
இந்த மைதானத்தில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த மைதானத்தில் இங்கிலாந்தின் பந்துவீச்சை விட இந்தியாவின் பந்துவீச்சு கலவை பொருத்தமாக இருக்கும். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் இங்கிலாந்துக்கு முக்கியமானவர்கள். எனவே அந்த 2 வீரர்களை இந்தியா எதிர்கொண்டால் இங்கிலாந்து பந்துவீச்சை முறியடிக்க முடியும்.

இந்திய அணியை பொறுத்தவரை அவர்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.குறிப்பாக மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் நிதானமாக செயல்பட்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் துல்லியமாக பந்து வீசக்கூடிய பும்ரா அணிக்கு மேலும் வலுவை சேர்க்கிறார். அதனால் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்தியாவுக்கு இது மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கும்.

மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தத் தொடரில் பும்ரா ஏற்கனவே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இங்குள்ள நிலைமைகள் 2022 போட்டியிலிருந்து வேறுபட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில், இங்கிலாந்தை விட இங்குள்ள சூழல் இந்திய அணிக்கே பொருத்தமாக இருக்கிறது,” என்றார். இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற்று செமி பைனலுக்கு நுழைய வேண்டும் என்பதே பல்வேறு ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.