மலேசியா செல்வதற்கு வாடகை கார்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு...
சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை காலம் தொடங்கி விட்டதால் அனைவரும் சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். அதிலும் சிங்கப்பூரர்கள், குறிப்பாக இளையவர்கள், இப்போது மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்ள துவங்கியுள்ளனர். அதற்கு அவர்கள் பெரும்பாலும் வாடகை கார்கள் மற்றும் தனியார் பேருந்துகளையே அதிகம் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கார்களை வாடகைக்கு எடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கார் வாடகை நிறுவனமான Lylo தெரிவித்துள்ளது. 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெரும்பாலானோர் வாடகை கார்களில் பயணிக்க விரும்புவதாக CNA -யிடம் சொன்னது.
மலேசியா செல்லும் வாடகை கார்களின் எண்ணிக்கை 100 லிருந்து 300 ஆக உயர்ந்துள்ளதாக வாடகை கார் நிறுவனமான Lylo தெரிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை நாட்களில் பல குடும்பங்கள் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்வதற்கு ஓட்டுநர் ஓட்டும் கார்களை வாடகைக்கு எடுப்பதையே விரும்புகின்றனர். கார்கள் வழக்கமாக 3 இரவுகளில் தொடங்கி ஒரு வாரம் வரை வாடகைக்கு எடுக்கப்படுவதாக தெரிவித்தது.
தனியார் பேருந்து சேவைகளும் அதிகமாக உள்ளன. பிரபலமான இடங்களாக பினாங்கு மற்றும் ஈப்போ ஆகியவை உள்ளன. சிலர் தாய்லாந்தின் ஹட் யாய்க்கும் செல்கிறார்கள்.
KKKL டிராவல் & டூர்ஸ நிறுவனமானது,கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மெர்சிங் தியோமான் தீவுக்குச் செல்ல சிலர் வாடகை பேருந்துகளை எடுப்பதாகக் கூறியது.
மக்களின் தேவைகள் அவ்வப்போது மாறுபடும்.அதற்கேற்ப நிறுவனங்கள் சில நேரங்களில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல்களை சந்திப்பதாக கூறியது. KKKL டிராவல் & டூர்ஸ் நிறுவனத்தில் உள்ள பல டிரைவர்களில் சிறந்த டிரைவரை தேர்ந்தெடுப்பது ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் கூறியது.
Follow us on : click here