ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Kathleen Folbigg என்ற பெண்மணி தனது நான்கு குழந்தைகளை கொன்ற வழக்கில் 2003 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்த அந்த பெண், கடந்த ஜூன் மாதம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் குழந்தைகள் இயற்கை காரணங்களால் தான் இறந்தார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
இத்தனை வருட தவறான சிறைத் தண்டனைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இழப்பீடு தொகையை அவரது வழக்கறிஞர் கோரவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சட்ட சீர்திருத்தம் இல்லாவிட்டால் இது போன்ற தவறுகள் தொடரும் என்று ஆஸ்திரேலிய அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாகி கூறினார்.