நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!!

நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவம்!! ஒலித்த அலறல் சத்தங்கள்!! உயிரைக் காப்பாற்ற ஓடிய மக்கள்!!

மத்திய ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த துயரச்சம்பவம் மே 24-ஆம் தேதி அன்று அதிகாலை நேர்ந்தது.

நள்ளிரவு 12:30 மணியளவில் தீப்பற்றியது.

பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.

காலை 6:20 மணியளவில் அதிகாரிகள் இறப்பு மற்றும் காயங்களை உறுதிப்படுத்தினர்.

சம்பவத்தின் போது கட்டிடத்தில் 24 பேர் வசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுக்குமாடி கட்டிடம் ஒரு குறுகிய 2 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது.

கட்டிடத்தின் மேல் தளங்கள் குத்தகைதாரர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டன, முதல் தளம் மின்சார சைக்கிள்களை விற்பனை செய்வதற்கும் பழுதுபார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் சண்டையோ ஏதோ ஜன்னலில் அடிக்கிறதோ என்று நினைத்தாக அங்கு வசிப்பவர்களில் ஒருவர் கூறினார்.

ஆனால் கீழே ஓடியபோது கட்டிடம் தீப்பற்றி எரிவதைக் கண்டதாக கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.