வெயில் காலம் வந்துடுச்சு...!!!! எந்த சன்ஸ்கிரீன் சருமத்திற்கு சிறந்தது...???

வெயிலில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க பல்வேறு கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றில், சன்ஸ்கிரீன் சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் வெயிலில் வெளியே செல்லும்போது, நமது சருமத்தின் நிறம் முற்றிலும் மாறுகிறது. நமது முகம் மற்றும் கைகளின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிறத்தில் தோன்றும்.அதிக நேரம் வெயிலில் படும் சருமத்தின் நிறம் கருமையாகி தனியாகத் தெரியும். இதற்காகத்தான் பலர் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் தடவ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் சருமம் பாதிக்கப்படும், புற்றுநோய் ஏற்படும் என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது.
மேலும் சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எல்லா சன்ஸ்கிரீன்களும் சருமத்திற்கு நல்லதல்ல.
எந்த சன்ஸ்கிரீன்கள் சிறந்தது…???
சன்ஸ்கிரீன்களில் SPF 15, SPF 30, SPF 50 போன்றவை வருகின்றன. SPF 30 நமது சருமத்தை UV கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.வெயில் காலத்தில் SPF 30 சன்ஸ்கிரீன் தான் வெயில் காலத்தில் சிறந்தது.
மேலும், சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன், அதன் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டியது அவசியம். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கும். நமது முகத்திற்கு 3 மில்லி சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் போதும்.
சன்ஸ்கிரீனை வாங்குவதற்கு முன், SPF PA +++ குறியீடு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இது சூரிய கதிர்வீச்சிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்கிறது.
காலையில் போடும் சன்ஸ்கிரீனை மாலை வரை அப்படியே வைத்திருக்கக் கூடாது.சன்ஸ்கிரீனை சருமத்தில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை வைத்திருக்கலாம்.
அதன் பிறகு, உங்கள் சருமத்தை மீண்டும் சுத்தம் செய்து சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் சருமம் வெயிலில் சென்றாலும் கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan