சிங்கப்பூரில் தொடங்கிய விடுமுறை காலம்!! அதிகரித்துள்ள பண பரிமாற்ற வர்த்தகம்!!

சிங்கப்பூரில் தொடங்கிய விடுமுறை காலம்!! அதிகரித்துள்ள பண பரிமாற்ற வர்த்தகம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை தொடங்கி விட்டதால் பலர் விடுமுறையை கொண்டாடுவதற்காக தற்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் சிங்கப்பூரில் நாணயம் மாற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சிங்கப்பூரில் வழக்கத்தை காட்டிலும் குறிப்பாக விடுமுறை காலத்தில் பணமாற்று வர்த்தகமானது 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக வர்த்தக மேலாளார் ஒருவர் கூறியுள்ளார்,

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆஸ்திரேலியா டாலர், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங் தவிர்த்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் நாணயங்கள் அதிக அளவில் மாற்றப்படுவதாக கூறினார். மேலும் ஆசிய நாடுகளின் பணமதிப்பை விட சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகம் என்றும் கூறியிருந்தார். மேலும் பணத்தின் மதிப்பானது நாளுக்கு நாள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது எனவே தேவை ஏற்படும் பொழுது அதை மாற்றுவது நல்லது என்று கூறினார்.

தெம்பனீஸ் கடை தெருவில் உள்ள சந்திரா எக்ஸ்சேஞ்சின் கடை மேலாளர் பிரபு கூறியதாவது,
இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலா செலவினம் குறைவு என்பதால் சிங்கப்பூரர்கள் ஆசிய நாடுகளையே அதிகம் விரும்புவதாக கூறினார். மேலும் சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் மற்றும் அங்கு வருகை தரும் மக்களின் தேவைக்கென பணமாற்று வர்த்தகமானது
இடத்திற்கு இடம் மாறுபடுவதாக கூறினார். அவர்களிடம் பெரிய தொகை இருந்தால் அதை சிறிது சிறிதாக மூன்று முறை மாற்றி கொள்ளலாம் என்றும் பண மதிப்பில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க சுற்றுலா சென்று திரும்பியவுடன் மீதமுள்ள பணத்தை மீண்டும் சிங்கப்பூர் வெள்ளிக்கு மாற்றுவது நல்லது என்றும் கூறினார்.

லக்கி பிளாஸாவில் பிலிப்பைன்ஸ் பெசோவை மாற்றுவோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்று வர்த்தக மேலாளார் ஒருவர்  கூறினார். மேலும் இத்தொழிலை பொறுத்தவரை மின்னிலக்க கட்டண முறை மிகப்பெரிய சவாலாக உள்ளதாக கூறினார்.

ஆனால் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் இன்னும் பண பரிமாற்ற வர்த்தகத்தை விரும்புகிறார்கள்.அது கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக கூறினார்.

இனி வரும் காலங்களில் தொழில் நுட்ப வளர்ச்சியினால் அனைத்து இடங்களிலும் மின்னிலக கட்டணமுறை செயல்பாடு அதிகரித்து அதனால் பணமாற்று வர்த்தகர்களின் எண்ணிக்கை குறையலாம். எனவே பணமாற்று வர்த்தகர்கள் இக்கால கட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.