ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மே-19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அன்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லா ஹியன் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மாயமானது.

மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

ஈரானின் அனைத்து இராணுவம் மற்றும் Elite Revolutionary Guards resources ஆகியோர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த இராணுவத் தளபதி உத்தரவிட்டார்.

மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணி நீடித்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை(இன்று) காலை தேடலின் போது ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்த உலகத் தலைவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.ஏனென்றால், கிடைத்துள்ள பாகங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாறு கூறப்பட்டது.

ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில் இருப்பதால் உயிர் பிழைத்தோர்கள் யாரும் இல்லை என்று ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெலிகாப்டரில் பயணித்த அதிபர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அவர்களுடன் பயணித்த அனைவரும் வீரமரணம் அடைந்தனர் என்று ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிபர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.