ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி!

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி!!

வடக்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானி உயிரிழந்தார்.

ஹோட்டலில் தங்கிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இச்சம்பவம் நேர்ந்தது.

இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஹோட்டலின் மாடியில் மோதியதில் விமான தீப்பற்றி எரிந்தது.அதனால் அங்கிருந்தவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற கிரேட் பேரியர் ரீஃபின் நுழைவாயிலை வழங்கும் கெய்ர்ன்ஸ் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.

விபத்து நடந்த இடத்திற்கு ஆஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் அரசு புலனாய்வாளர்கள் குழு இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here ⬇️