மக்களிடையே அதிகரிக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஆர்வம்…!!!

மக்களிடையே அதிகரிக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஆர்வம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்களும் சுற்றுலாப் பயணிகளும் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்களது கொண்டாட்டங்களுக்காக முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரின் உணவு மற்றும் குளிர்பானத் தொழிலுக்கு ஏற்றம் தரும் மாதமாகும்.

ஆண்டின் இறுதி கொண்டாட்டங்களுக்காக சிங்கப்பூரில் இருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் டிசம்பர் மாதம் இந்தத் துறைக்கு சிறந்த மாதமாகத் தொடர்கிறது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில் சிங்கப்பூரர்களும் சுற்றுலாப் பயணிகளும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து தங்கள் கொண்டாட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

எனவே இங்குள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் கடந்த ஆண்டை விட அதிக முன்பதிவுகள் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஹில்ட்டன் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ஹோட்டலின் நிர்வாகி லிண்டா ரெட்டி கூறுகையில், ஓட்டலில் உள்ள ‘எஸ்டேட்’ உணவகத்தின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக கூறினார்.

இந்த ஆண்டு தேவை அதிகரிப்பால் ஹோட்டலில் முன்பதிவுகள் ஒரு மாதம் முன்னதாகவே நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். டிசம்பரில் இதுவரை, இரவு உணவிற்கான இருக்கைகள் 85 சதவீதம் நிரம்பிவிட்டதாகவும், டிசம்பர் 18 முதல் கிறிஸ்துமஸ் வரையிலான பல தேதிகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், பான் பசிபிக் ஹோட்டல் குழுமத்தின் உணவு மற்றும் குளிர்பானப் பிரிவுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டு(2023) டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு(2024) நவம்பர் மாத இறுதி வாரங்களிலே தொடங்கப்பட்டது.

இந்த ஹோட்டல் குழுமத்தை சேர்ந்த பல்வேறு உணவகங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் இந்த மாதம் முழுவதும் நிரம்பியுள்ளது.

மக்களிடையே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஆர்வமும் ஈடுபாடும் அதிகரித்திருப்பது இதன் மூலம் அறியலாம்.