நாடாளுமன்றத்தில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைப்பார்கள். அதனை அரசாங்கம் ஒரு போதும் நிராகரித்தது இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அதிபர் ஹலிமா யாக்கோபின் உரை குறித்து விவாதம் நடந்தது.அப்பொழுது அதனைப் பற்றி சுகாதார அமைச்சர் கூறினார்.
உறுப்பினர்கள் முன் வைக்கும் யோசனைகளை அரசாங்கம் வரவேற்கிறதாக கூறினார்.
மறு ஆய்வு செய்யும் போது அல்லது கொள்கைகளை உருவாக்கும் போது அவர்கள் முன்வைக்கும் யோசனைகள் அதற்கு பொருத்தமாக இருந்தால் அவற்றைச் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.
அவர்கள் முன்வைக்கும் யோசனைகள் ஆளுங்கட்சிக்கு மாறுபட்ட கருத்தாக இருந்தால் அதற்கு விளக்கமளிப்பதாகவும் கூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி,எதிர்தரப்பு பாட்டாளி கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.அவர்கள் கூறிய கருத்துகளுக்கு சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பதில் அளித்து பேசினார்.