சிங்கப்பூரர்கள் பொருளியல் உயர்வைச் சமாளிக்க தொடர்ந்து வேலையில் இருப்பதும்,அவர்களுக்கென வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளவதே நிரந்தர தீர்வு தரும்.
இவ்வாறு வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் S. ஈஸ்வரன் கூறினார்.
இந்த நிச்சயமற்ற சூழலில் வரும் சவால்களைச் சமாளிக்கவும், பண வீக்கத்தை எதிர்கொள்ளவும் அரசாங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஆண்டின் வரவு செலவு திட்டம் அமைந்து இருப்பதாக அவர் கூறினார்.
அமைச்சர் சிறப்பு நேர்காணலில் கலந்துக் கொண்டார்.அதில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் திட்டங்கள்,சிங்கப்பூரின் எதிர்காலம் ஆகியவைப் பற்றி பேசினார்.