சாங்கி ஏர்போர்ட்டில் சறுக்கி விளையாடிய பெண்!! தலையில் காயம்!! உதவி செய்த விமான பணிப்பெண்!!

சாங்கி ஏர்போர்ட்டில் சறுக்கி விளையாடிய பெண்!! தலையில் காயம்!! உதவி செய்த விமான பணிப்பெண்!!

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் உள்ள சருக்கில் விளையாடிக் கொண்டிருந்த போது Koey Har என்ற பெண்ணிற்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்த வீடியோவை ஹார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சறுக்கி விளையாடும் போது எதிர்பாராத விதமாக தலையில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் ஜூன் 2 பிற்பகல் 3.10 மணியளவில் நிகழ்ந்தது.

அன்றைய நாளில் 3.40 மணிக்கு அவர் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

அதனால் ஹாருக்கு மருந்தகத்திற்குச் செல்வதற்கு நேரமில்லையாம்.

ஹார் விமானத்தில் ஏறிய பிறகு, ஒரு விமானப் பணிப்பெண் அவர் காயமடைந்ததை உணர்ந்து அவருக்கு உதவினார்.

விமான பணிப்பெண் ஹாரியின் காயத்திற்கு கவனமாக சிகிச்சை அளித்தார். மேலும் வலியை பொறுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டு கனிவுடன் முதலுதவி செய்து நன்றாக கவனித்து கொண்டார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு,விளையாடும்போது பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஹார் கற்றுக்கொண்டதாக கூறினார்.