பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சதி திட்டம் தீட்டி திருட முயற்சி செய்த கும்பல்!!
சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் இல் உள்ள ஒரு கிடங்கிற்குள் புகுந்து (HSA) சுகாதார அறிவியல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த மின் வேப்பரைசர்கள் மற்றும் அவை சம்மந்தப்பட்ட பிற பொருட்களைத் திருட முயற்சி செய்த குற்றத்தை மூன்று பேர் நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ளனர்.
சீ வை யுவன் வயது 35, எல்வின் சூரியகானந்தன் வயது 22, லிம் ஜி வெய் வயது 38 உள்ளிட்ட மூன்று ஆண்கள் மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கிடங்கிற்குள் நுழைய மிங் என்ற நபருடன் சீ சதி வேலையில் மார்ச் 23-ஆம் தேதி அன்று ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வளாகத்தை அவர்கள் நோட்டமிடவும் திட்டமிட்டுள்ளனர்.சீ மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்.
மார்ச் 26 ஆம் தேதி அன்று சிங்கப்பூரை சேர்ந்த சூரியகானந்தன் மற்றும் லிம் இருவரும் சேர்ந்து வளாகத்தை நோட்டமிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
வியாழக்கிழமையன்று (மார்ச் 28) இவர்கள் மூவரும் இணைந்து வளாகத்திற்குள் நுழைந்து திருட முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.
இந்த சதி வேலைக்கு மிங் முக்கியப்புள்ளியாக இருக்கலாம் என்பது போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. லிம் மற்றும் சீயையிடம் விசாரணை நடத்தியதில் தெரிய வந்ததாக கூறியது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூன்று ஆண்களை ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 21 வயதுடைய ஒரு பெண்ணையும் புதன்கிழமை(மார்ச் 27) அன்று கைது செய்ததாக தெரிவித்தது. இந்த தகவலை போலீஸார் மற்றும் எச். எஸ். ஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg