இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபரின் அன்பான அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின சிறப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக விருந்தினராக பாரிஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டின் பிரதமரான எலிசபெத், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார்.
அதனை அடுத்து அதிபரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை எடுத்து, மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லிஜியன் ஆப் ஹானர்’ பிரதமர் மோடி அவர்களுக்கு, அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரண் வழங்கினார். இதற்கு முன் இந்த விருதுகள் ஆனது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்சல் மற்றும் இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ் கொன்றோர்க்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விருதுனை பெற்றுள்ள, அடுத்த அதிபர் என்ற கௌரவத்தை பெற்றுள்ளார் இந்தியாவின் பிரதமர். இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட twitter பதிவில், இந்தியாவுடன் கொண்டுள்ள நட்புறவை பலப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்திய மக்கள் சார்பாக, பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த விருது வழங்கும் பழக்கமானது பிரான்சில் 1802 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் லட்சியங்களுக்கு உதவியாக இருக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
பிரான்சில் உள்ள இந்தியர்களிடையே உரையாடிய மோடி, இந்திய துணை தூதரகம் பிரான்சில் விரைவாக திறக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தியா பிரான்சிக்கு இடையிலான உறவு முன்பை விட பல மடங்கு வலிமை அடைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் இந்தியா அனைத்து துறைகளிலும், பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை எட்டி வருகின்றது என்று இந்தியாவின் பெருமைகளை பிரான்ஸ் நாட்டில் எடுத்துரைத்தார்.