இங்கிலாந்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமான Blenheim அரண்மனையில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 18 கேரட் தங்க கழிப்பறை கடந்த 2019-ஆம் ஆண்டு திருடப்பட்டது.இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு , நவம்பர் 28ஆம் தேதி அன்று நீதிமன்றத்துக்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
‘அமெரிக்கா’ என்று பெயரிடப்பட்ட அந்த தங்க கழிவறையின் மதிப்பு சுமார் 5.9 மில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும்.
இந்த கழிப்பறை மீட்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்த தகவல் எதுவும் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.