ஜூன் 18-ஆம் தேதி 2021-ஆம் ஆண்டு பங்களாதேஷைச் சேர்ந்த நபர் Moderna/Spikevax தடுப்பூசியைக் கொண்டார்.
அவர் ஜூலை 9-ஆம் தேதி வேலைச் செய்து கொண்டு இருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு 21 நாட்கள் மட்டுமே ஆனது.அவருக்கு வயது 28.
தடுப்பூசி போட்டுக் கொண்ட 21 நாட்களுக்கு பிறகு உயிரிழந்ததால் விசாரணை நடைபெற்றது.
அவர் மரணம் மருத்துவ விபத்து என்று மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
மரண விசாரணையில் அவருக்கு இதயம் வீக்கம் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டனர்.
சுகாதார அமைச்சகம் அவருடைய குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
225,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும்.நிதியுதவி தொகை தடுப்பூசி நிதி உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.
அவரது குடும்பத்துக்கு சுகாதார அமைச்சகம்,மனித வள அமைச்சகம் இணைந்து உதவி செய்யப் பணியாற்றி வருகிறது.
இது உள்ளூர் அளவில் தடுப்பூசி தொடர்பில் பதிவான முதல் மரண சம்பவம்.