பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள F1 கார் பந்தயத்தின் இறுதிச்சுற்று…!!!

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள F1 கார் பந்தயத்தின் இறுதிச்சுற்று...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தின் இரண்டாவது பயிற்சி சுற்றில் மெக்லாரன் மெர்சிடிஸ் காரை ஓட்டிய லென்டோ நோரிஸ் முதலிடம் பிடித்தார்.

ஃபெராரி காரை ஓட்டிய சார்ல்ஸ் லெக்லே இரண்டாவது இடத்தையும், அதே அணியின் கார்லோஸ் சயின்ஸ்  ஜூனியர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட் பகுதியில் குவிந்தனர்.

இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று(செப்டம்பர் 22) இரவு 8:00 மணிக்கு மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் நடக்கிறது.

இந்நிலையில் கார் ரேசர்ஸ்கள் 4.94 கிமீ பாதையில் 62 முறை வலம் வருவார்கள்.

இந்நிலையில் கீழ்க்கண்ட ஐந்து இடங்களில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
☆Our Tampines Hub
☆Heartbeat @ Bedok
☆Keith Hong Community Centre
☆Bishan Community Centre
☆Woodlands Galaxy Community Centre

மக்கள் பந்தயங்களின் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும்போது, ​Go-kart போன்ற விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.