Singapore News in Tamil

எந்த படுக்கை அறையில் யார் உறங்க வேண்டும்?என தொடங்கிய சண்டை கடைசியில் கொலையில் முடிந்தது!

கடந்த 2019-ஆம் ஆண்டு Pak kian Huat எனும் நபர் தன் மனைவி Lim Soi Moy எனும் 79 வயதுடையவரை பாரங்கத்தியால் வெட்டி கொன்றார்.

இந்த சம்பவம் HDB குடியிருப்பு வீடொன்றில் நடந்தது.

எந்த படுக்கையறையில் யார் உறங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்த சண்டை ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கொல்லும் வரை சென்றது.

முதலில் கொலைக் குற்றத்தை பாக் ஒப்புக் கொண்டார்.

அவருக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி See Kee Oon மிகவும் கொடூரமான முறையில் அந்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்ததைக் குறிப்பிட்டார்.

மரணம் விளைவித்த குற்றத்திற்காக பிரம்படியுடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபராதம், பிரம்படியுடன் கூடிய 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

76 வயதுடைய பாக் தமது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் நேற்று(மே-22) அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.