இன்று அதிகாலை 12.55 மணியளவில் துவாஸ் சுங்க சாவடியில் விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் அதிகாரி ஒருவருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
certis துணைக் காவல் அதிகாரியின் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியது.
இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் வாகனங்களுக்கான நுழைவாயில் பகுதியில் அதிகாரி நின்று கொண்டிருந்தார்.
இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவித்தது.அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
விபத்து நடந்த இடத்திற்கு போக்குவரத்து காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் உடனடியாக வந்தனர்.
Certis துணைக் காவல் அதிகாரியும், கார் ஓட்டுநரையும் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறது.