29 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ள புகழ்பெற்ற இசையமைப்பாளர்!!

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான AR ரகுமானும், அவரது மனைவி இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ளனர்.

இருவருக்கும் திருமணம் ஆகி 29 ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மனவுளைச்சல் ஏற்பட்டதே பிரிவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.அவர்கள் இருவருக்கும் 1995-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அவர்களுக்கு கத்திஜா, ரஹிமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.திருமண பந்தத்திலிருந்து விலகும் முடிவு மிகுந்த வலியுடன் எடுக்கப்பட்டதாக பானு தெரிவித்தார்.

மேலும் இந்த கடினமான நேரத்தில் தங்களுக்கு தேவையான தனிமையை கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

AR ரகுமான் 1992-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார்.