சஃபாரி வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய யானை!! பலியான பெண் !!

சஃபாரி வாகனத்தை ஆக்ரோசமாக தாக்கிய யானை!! பலியான பெண்!!

தெற்கு ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் சஃபாரி வாகனத்தை யானை தாக்கியது.

இந்த சம்பவம் மார்ச் 30ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சஃபாரி வாகனத்தில் இருந்த ஆறு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த 79 வயதான அமெரிக்கப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஒரு பெண் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற நான்கு பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.