மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!! பயணிக்கு ஏற்பட்ட விபரீதம்!!
உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் சிங்கப்பூர்-ஜோகூர் எக்ஸ்பிரஸ் பேருந்து ஓர் பயணியின் கால்கள் மீது அதன் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. பேருந்தின் டிரைவர் மலேசியர் குணசீலன் R சுப்பிரமணியம் (45).
Tuminah Sapie என்ற பயணி தனது கால்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.
சம்பவம் நடந்த தினத்தன்று பேருந்திலிருந்து கடைசி பயணி இறங்கி கொண்டிருந்த போது டிரைவர் அதனை கவனிக்காமல் பேருந்தை இயக்கினார்.
அதனால் பயணி நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். பேருந்தின் பின் சக்கரங்கள் பயணியின் கால்கள் மீது ஏறி இறங்கியது.
பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரின் கால்கள் துண்டிக்கப்பட்டது.
பேருந்து டிரைவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து வாதடினார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியளித்தனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று பேருந்து டிரைவர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 3 வார சிறைத் தண்டனையும், இரண்டு வருடம் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.