உரிய நேரத்தில் நோயைக் கண்டறியாத மருத்துவர் இடை நீக்கம்!!

உரிய நேரத்தில் நோயைக் கண்டறியாத மருத்துவர் இடை நீக்கம்!!

சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவருக்கு தவறான பரிசோதனை மேற்கொண்டதால் மருத்துவர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் யோ கீ ஹாங் என்பவரிடம் பரிசோதனைக்காக வந்த சிறுவன் ஒருவருக்கு வயிற்று பெருங்குடல் மற்றும் பின்னர் வீக்கம் இருப்பதாக கண்டறிந்த பின் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்து மற்றும் Antibiotics – களை உட்கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.

எனினும், உடல்நிலை மோசமடைந்தது.அதனால் மீண்டும் அந்த சிறுவன் டாக்டரை சந்தித்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினார்.

தவறான சிகிச்சை அளித்ததால், சிறுவனின் நோயைக் உரிய நேரத்தில் கண்டறியததால் தனது விதப்பையை அந்த சிறுவன் இழந்தார்.

சிறுவனுக்கு Testicular Torsion இருப்பதை டாக்டர் தாமதமாக கண்டறிந்தார்.

இதனையடுத்து டாக்டர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

ஒரு வருடத்திற்கு பணி நீக்கம் செய்யப்பட்டார்.