சிங்கப்பூரில் தற்போது Zika தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் Melvin Yong கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் Grace Fu இவ்வாண்டின் முதல் பாதியில் 22 Zika தொற்று பதிவானதாக தெரிவித்தார்.
கோவன் வட்டாரத்தில் 15 தொற்று பரவல் அதில் அடங்கும்.
அந்த வட்டாரத்தில் தற்போது தொற்று குறைந்து விட்டதாகவும் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மற்ற 7 தொற்றுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்றார்.
ஏடிஸ் கொசு மூலம் Zika தொற்று பரவுவதால் அதைத் தடுக்க Project Wolbachia உதவும் என்றும் கூறினார்.