இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு……தகர்த்தப்பட்ட வெடிகுண்டு….

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது விமானம் வழியாக வீசப்பட்ட வெடிகுண்டு அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் எடை கிட்டத்தட்ட 100 கிராம் இருக்கும்.அதனை தகர்க்க முடிவெடுக்கப்பட்டது.

அதனை நகர்த்துவது மிக ஆபத்தான செயல் என்பதால் அது இருக்கும் இடத்திலேயே தகர்த்த முடிவெடுக்கப்பட்டது.இந்த தகவலை சிங்கப்பூர் ஆயுதப்படையின் நிபுணர்கள் கூறினர்.

செப்டம்பர் 26-ஆம் தேதி(இன்று) தகர்த்த முடிவு செய்யப்பட்டது.

சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டது.தகர்ப்பின்போது வெடிகுண்டை சுற்றி மணல் மூட்டைகள் வைக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னெச்சரிக்கையாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இன்று வெடிகுண்டு தகர்த்தப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.அதற்கான பணியில் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு தகர்ப்பால் அப்பர் புக்கிட் தீமா சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.அதனால் பேருந்து சேவைகள் வேறு பாதையில் இயக்க மாற்றப்பட்டது. இந்த மாற்றம் இன்று காலை 11 மணி முதல் 7 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த தகவலை SMRT நிறுவனம் முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

இன்று வெடிகுண்டை தகர்ப்பதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்றது.முதல்கட்ட பணி சுமார் 12.30 மணியளவில் நடந்தது.இரண்டாம் முறை சுமார் 1.50 மணியளவில் வெடிகுண்டு தகர்த்தப்பட்டது.

வெடிப்பின்போது மணல் மூட்டைகள் சிதறின.பலத்த சத்ததுடன் வெடித்தது.பறவைகள் பறந்தன.அங்கு சுற்றி உள்ளவர்கள் அதனை உணர்ந்ததாக கூறினர்.