2023, ஜூன் 8-ஆம் தேதி எங் காங் மொட்டை மாடியில் அமைந்துள்ள 2-அடுக்கு கடையின் மேற்கூறையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் உயரத்தில் ஊழியர்கள் வேலை செய்வதை பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளுக்கு ஜூன் 8-ஆம் தேதி MOM செவி சாய்த்துள்ளது.
அதற்கு பதிலும் அளித்துள்ளது.
கருத்துகளின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது.
MOM ஆய்வின் போது அங்கு வேலையிடத்தில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை கண்டறிந்தனர்.
அதைத் தவிர,வேலை இடத்தில் பாதுகாப்பற்ற செயல்கள், வேலை செய்யும் இடத்தின் நிலைமை என பல பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதையும் கண்டறிந்தனர்.அது மட்டுமல்லாமல் வேலை நடவடிக்கைகளின் மோசமான மேலாண்மை இருப்பதையும் கண்டறியப்பட்டது.
இடர் மதிப்பீடு, பாதுகாப்பான பணி நடைமுறைகள், வீழ்ச்சி தடுப்பு திட்டம் மற்றும் Scaffold பதிவு போன்ற முக்கியமான ஆவணங்கள் கிடைக்கவில்லை.
இத்தகைய பாதுகாப்புகள் வேலை இடத்தில் இல்லை என்றால் ஊழியர்களுக்கு அது ஆபத்து விளைவிக்கும் என்று MOM கூறியது.
உடனடியாக வேலைகளை நிறுத்தும்படி ஆக்கிரமிப்பாளர், J&C Refurbishment நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு $8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
“ J&C Renovation Enterprises ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை இல்லை என்பது ஆய்வு நடத்தியதில் தெளிவாகத் தெரியவந்துள்ளதாகவும் கூறியது. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களில் ஒருவர் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பு இல்லாமல் ஊழியர்கள் வேலை செய்வது குறித்து எச்சரித்ததால், விரைவாக தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததாகவும் கூறியது.
இத்தகைய புகார்கள் வேலை இடத்தில் நடக்கும் ஆபத்துகளை தடுத்து உயிர்களை காப்பாற்றுகிறது.
பொதுமக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கவனிப்பதில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றும் போது வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை உயர்த்தி, வேலை இட விபத்துகள் நிகழாமல் தடுக்கலாம்.
வேலை இடங்களில் நீங்கள் ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை கண்டால், Snapsafe (www.go.gov.sg/snapsafe) என்ற இணைய பக்கத்தில் புகார் அளிக்கவும்.
முறையான பாதுகாப்பு இல்லாமல் வேலை இடங்களை கண்டு புகார் அளித்தால், நாம் ஒன்றாக உயிர்களை காப்பாற்ற முடியும். ´´
அண்மையில் நடந்த கட்டிட விபத்தை யாராலும் மறக்க இயலாது.தஞ்சோங் பகாரில் நடந்த கட்டிட விபத்தில் பல கனவுகளுடன் சிங்கப்பூர் வந்த வினோத் குமார் காற்றாய் கனவுகளோடு மறைந்தார். இத்தகைய துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க உங்கள் கண்முன் ஏதேனும் பாதுகாப்பற்ற முறையில் வேலைகள் நடந்தால் Snapsafe இணைய பக்கத்தில் புகார் அளியுங்கள்….