நடிகர் விஜய் சேதுபதியின் அழகை வர்ணித்த இயக்குநர்!! திடீரென விஜய்சேதுபதியை சந்தித்த சர்ச்சை இயக்குநர்!!

நடிகர் விஜய் சேதுபதியின் அழகை வர்ணித்த இயக்குநர்!! திடீரென விஜய்சேதுபதியை சந்தித்த சர்ச்சை இயக்குநர்!!

சென்னை: சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் இயக்குநர் ராம் கோபால் வர்மா. பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார்.இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ரத்னா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவருக்கு ஒரு மகள் உள்ளார்.1989இல் தெலுங்கில் நாகர்ஜுனாவை வைத்து ‘சிவா’ எனும் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார்.

மேலும் அமிதாப் பச்சன் நடித்த சர்க்கார், சூர்யா நடிப்பில் வெளிவந்த ரத்த சரித்திரா உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தமிழில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளிவந்த ‘திருடா திருடி’ படத்தின் கதாசிரியரும் இவர்தான்.இவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சொல்லும் படியாக இல்லை.எனவே தனிக்காட்டு ராஜாவான இவர் உல்லாச மோகத்தில் பல மாடல் அழகிகளை வைத்து ‘ஹாட் செக்ஸ் அண்ட் ரூத்’, ‘கிளை மேக்ஸ்’ உள்ளிட்ட பல கவர்ச்சி படங்களை தந்து ரசிகர்களை திடீர்
அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இவரின் அரசியல் சர்ச்சைக்குள்ளான படங்களில் ‘கில்லிங் வீரப்பன்’ ‘லட்சுமி என்டிஆர்’ உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் திடீரென விஜய் சேதுபதியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விஜய் சேதுபதியை படத்தில் காண்பதை காட்டிலும் நேரில் மிகவும் அழகாக உள்ளார் என அவரை வர்ணித்து பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட திரையுலகத்தினர் சிலர் இருவரும் இணைந்து புதிய படம் இயக்குவது குறித்து பேசி இருக்கலாம் என்று பேசப்படுகிறது.