ஜப்பானின் சுற்றுலாத் துறையின் இலக்கு!!
ஆண்டிற்கு 60 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இலட்சியத்தை இலக்காக கொண்டுள்ள தாக ஜப்பானின் சுற்றுலாத்துறை தலைவர் ஜூன் 20-ஆம் தேதி தெரிவித்தார்.
அது தற்போதைய அளவைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கூறினார்.
கடந்த ஆண்டுகள் தென் கொரியா சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கிருமி பரவல் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் வெளிநாட்டிலிருந்து 25 மில்லியனுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.
ஆண்டுக்கு 60 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இலக்கு என்பது கடினமானது என்று சுற்றுலா ஏஜென்சி தலைவர் கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரியாத பல இடங்கள் ஜப்பானில் உள்ளன என்று அவர் கூறினார்.
மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மே மாதத்தில் வருகைப் புரிந்துள்ளனர். இது தொடர்ந்து மூன்றாவது முறை என்று கூறினார்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதோடு அவர்கள் மீது புகார்களும் வருகிறது. புகார்களை உள்ளூர் வாசிகள் அளிக்கின்றனர்.
Follow us on : click here