கடந்த ஆண்டு தங்கத்தின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுமார் 4,740 டன் தங்கம் வாங்கப்பட்டிருந்ததாக World Gold Council கூறியது. தங்கத்திற்கான தேவைக் கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக தெரிவித்துள்ளது.

மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் உயர்ந்து வரும் பண வீக்கத்திலிருந்து காத்துக் கொள்வதற்காக அதிக அளவில் தங்கம் வாங்கினர். அதிக அளவில் தங்கம் வாங்கியதே காரணம் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிட்டது.

இதுவரை கடந்த 50 ஆண்டுகளில் காணாத அளவு,2022-ஆம் ஆண்டு மத்திய வங்கிகள் 1,136 டன்க்கும் அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் போர் என்று தெரிவிக்கின்றனர். போரால் பணவீக்கம் மோசம் அடைந்ததாக தெரிவித்தனர்.

சென்ற ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்திருந்தது. இதனால் அதன் தேவைக் குறைவாக இருந்தது. சென்ற ஆண்டு மட்டுமே 2,086 டன் தங்க நகைகள் வாங்கப்பட்டுள்ளன.