கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!!

கொடுமையின் உச்சம்...!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்....!!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தாய் தனது 4 வயது மகளை ஒரு வருடமாக சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்ததில் அந்தப் பெண்ணின் காதலனும் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

இதனால் காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இறந்த சிறுமியின் பெயர் மேகன் குங்.

அந்தச் சிறுமியின் தாயான 29 வயதான ஃபூ லி பிங் மற்றும் 38 வயதான காதலன் வோங் ஷி சியாங்கும் சேர்ந்து சிறுமியை சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

அவர்களின் சித்திரவதை தாங்க முடியாத சிறுமி இறுதியில் உயிரிழந்துள்ளார்.

குற்றத்தை மறைக்க அவர்கள் சிறுமியின் உடலை எரித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

“மேகன் பல மாதங்களாக இருவரிடமும் உணவு மற்றும் உடை கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் அந்த அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை.”

“அவள் மிக மோசமான இடத்திலும் சூழ்நிலையிலும் தூங்கினாள்,” என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இது ஒரு கொடூரமான குற்றம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவது நபரான 35 வயதான நுவேல் சுவா ரோஷி,குழந்தையின் உடலை பயா லேபார் தொழில்துறை எஸ்டேட்டுக்கு எடுத்துச் சென்று ஃபூ மற்றும் வோங்குடன் சேர்ந்து உடலை எரித்ததாகக் கூறப்படுகிறது.

அவரது வழக்கு நிலுவையில் உள்ளது.