தீபாவளி பண்டிகையை ஒட்டி லிட்டில் இந்தியா பகுதியில் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்…!!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி லிட்டில் இந்தியா பகுதியில் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை களைகட்டி வருகின்றது. இதனால் மக்கள் கூட்டம் லிட்டில் இந்தியா பகுதியில் கடல் அலை போல் காட்சி அளிக்கின்றன.

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

சுமார் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு டெக்கா பிளேஸ் கடைத் தொகுதியில் பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அல்வின் டான் மற்றும் லிசா எனப்படும் லிட்டில் இந்தியா டிரேடர்ஸ் ஹெரிடேஜ் அசோசியேஷன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நடைமுறை அக்டோபர் 24 முதல் அமலுக்கு வந்தது.

இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 7ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

டெக்கா பிளேஸ் ஷாப்பிங் வளாகத்தில் 400 கார்கள் வரை பார்க்கிங் செய்வதற்கான வசதி உள்ளது.

கடந்த வார இறுதியில் லிட்டில் இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மோசமாக இருந்தது.

பப்பலோ சாலை, சிராங்கூன் சாலை, புக்கிட் தீமா, ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் சிலிகி சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கின.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக லிட்டில் இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை டெக்கா பிளேஸ் வணிக வளாகத்தில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.