சிங்கப்பூரில் உள்ள வணிக மையத்தில் 56 வயதான Ang Ah Lak என்பவருக்கும், 69 வயது முதியவர் ஒருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் கோபமடைந்த Ang, அந்த முதியவரை இடுக்கியால் தாக்கி கீழே தள்ளினார்.
கீழே விழுந்ததில், அந்த முதியவரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
பிறகு அந்த முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று நடந்ததது.
ஜூலை 21ஆம் தேதி அன்று அந்த முதியவர் உயிரிழந்தார்.அந்த முதியவரின் மரணத்திற்கு தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் மோசமான இதய நிலை காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
காவல்துறையினர் ஆங்கை கைது செய்தனர்.ஆங் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.ஜனவரி இரண்டாம் தேதி அன்று அவருக்கு 25 மாதம் 12 வாரம் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.