உலகளவில் சுமார் 17000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ள நிறுவனம்!!
உலகளவில் சுமார் 17000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 10 சதவீத ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அவர்களில் நிர்வாகிகள்,மேலாளர்கள் அடங்குவர்.
அமெரிக்காவில் ஒரு மாதமாக சுமார் 33,000 ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 737 MAX ,767,777 ரக விமானங்களின் தயாரிப்பு தாமதமடைகிறது.
2026-ஆம் ஆண்டில் தான் 777X ரக விமானங்களின் முதல் தொகுதி தயாராகும் என்று போயிங் தெரிவித்துள்ளது.அதன் முதல் தொகுதி அடுத்த ஆண்டு தயாராகி விடும் என முன்னதாக போயிங் நிறுவனம் கூறியிருந்தது.
777X ரக விமானத்துக்கான பாதுகாப்பு ஒப்புதலைப் பெறுவதில் போயிங் நிறுவனம் தாமத்ததை எதிர் கொண்டது.
ஊழியர்களின் வேலை நிறுத்தம் , விமானங்களின் தரம் பற்றிய கவலை என பிரச்சனைகளுக்கு இடையே போயிங் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg