இவ்வாண்டில் இரண்டாவது முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனம்……

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் LinkedIn தனது பொறியியல், திறனாளர் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் உள்ள 668 ஊழியர்களை குறைந்த வருவாய் வளர்ச்சி காரணமாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இதனால் 20,000 ஊழியர்களில் 3 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் பாதியில் சுமார் 141,516 ஊழியர்களை தொழில்நுட்ப துறையானது பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதம் LinkedIn சுமார் 716 வேலைகளை குறைக்க முடிவு செய்திருந்தது.