விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தற்போது நடக்கும் நான்காவது சீசனில் விசித்ரா, ஷெரின், ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ வி ஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் குக்குகளாக பங்கேற்றுள்ளனர்.
முதல் இரண்டு சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு உள்ளனர். கடந்த மூன்று சீசன்களிலும் மற்றும் கோமாளிகள் மாறினாலும், நடுவர்களில் மாற்றம் இல்லை.
செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகளை இருவரும் இணைந்து படாத பாடு படுத்தி விடுவார்கள்.
குறிப்பாக வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடித்து விடுவார். இதனால் பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் அவருடைய முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 14-ஆம் தேதி புதிய youtube சேனலை ஆரம்பிக்க உள்ளதைப் பற்றி பதிவிட்டு இருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஒரு பெண் இதற்கு மாறாக குறை கூறி கமெண்ட் செய்து இருந்தார்.
அந்த கமெண்ட்டில், “ நான் மலேசியாவில் இருந்து குக் வித் கோமாளி ரசிகை, நீங்கள் கோமாளியை நடத்தும் விதம் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு ஒரு உதாரணமாக இருங்கள். அதை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்துங்கள். மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள். நீங்கள் செய்வது எல்லாம் வெறும் ஜாலிக்காக மட்டும்தான் உண்மை இல்லை என்று சொன்னாலும் மலேசியாவை சேர்ந்த எங்களால் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தயவுசெய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ இதனை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து இருந்தார்.

இந்த கமெண்ட்க்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் ` இது வெறும் டிவி நிகழ்ச்சி அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து பார்க்காதீர்கள். கவுண்டமணி செந்திலை அடிக்கவில்லையா? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா? ஜெர்ரி டாமை எரிச்சலூட்டவில்லையா? கொஞ்சமாவது வளருங்கள்.இது வெறும் ஒரு நிகழ்ச்சி. நான் சொன்னேன் என்பதற்காக விஷத்தை எடுத்து குடித்து விடுவீர்களா உங்களுக்கு என்று சுய புத்தி கிடையாதா´ என பதிலடி கொடுத்தார்.