இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்...!!!
மலேசியாவில் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பூனையை தோளில் போட்டுக் கொண்டு ஓடி முடித்த ‘அப்பாக்’ என்ற நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
அவர் தனது செல்லப் பூனையான ‘ஜிபெக்’ உடன் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது.
ஜிபெக் அப்பாக்கின் தோளில் வசதியாக அமர்ந்து பந்தயத்தில் பங்கேற்ற காட்சி நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஜிபெக் நீலக் கண்ணாடி மற்றும் தொப்பி ஆகியவை அணிந்திருந்தது.
பந்தயத்தை முடித்ததும், அதன் உரிமையாளரைப் போலவே அதுவும் தனது கழுத்தில் பதக்கத்தை அணிந்திருந்தது.
பல நெட்டிசன்கள் ஜிபெக் மற்றும் அப்பாக் இடையேயான உறவை பாராட்டி வருகின்றனர்.
அப்பாக் 7 வருடமாக ஜிபெக்குடன் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
7.5 கிலோகிராம் எடைகொண்ட ஜிபெக்கைத் தமது தோள்களில் சுமந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டதாகவும் அவர் சொன்னார்.9
அவர் ஜிபெக்குடன் மலைகளில் ஏறியதாகவும், வான்வழி சாகசங்களுக்குச் சென்றதாகவும், இப்போது பந்தயத்தில் ஈடுபட்டதாகவும் கூறியது அனைவரின் ஆச்சரியத்தையும் பெற்றது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg