மின்னல் வேகத்தில் பறந்த கார்!!மீண்டும் கம் பேக் கொடுத்த அஜித்!!
அஜித் தென்னிந்திய திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகராவார். இவர் ‘தல அஜித்’, ‘அல்டிமேட் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அஜித் குமார் சினிமாவில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர். உலக அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்ட எஃப் ஒன் ரேசர் ஆவார்.2018 ல் தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ்பெற்றுள்ளார். அவர் நடித்த ஆசை திரைப்படம் அவருக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது. அப்போதுதான் மோட்டார் பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டு படுகாயம் அடைந்தார். மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்வது அஜித்துக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதனால் அவரின் உடலில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளது.
அஜீத்துக்கு பைக் மற்றும் கார்கள் மீது அலாதி பிரியம், மேலும் அவர் சாகச பந்தயத்தில் ஈடுபடுவதையும் விரும்புகிறார். ஆனால் சில காரணங்களால் சில வருடங்களாக கார் பந்தயத்தில் இருந்து விலகி இருந்த அஜித், தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார்.
அஜித் காரை மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஓட்டும் வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் உள்ள நிலையில், கடந்த 21ம் தேதி துபாயில் நடந்த கார் டிரைவில் கலந்து கொண்டார்.
அவர் 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
6 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில் அஜித் பல்வேறு நேரங்களில் வேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இது உண்மையான படத்தின் காட்சிகள் போல இருப்பதாகவும் அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதத்துடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடா முயற்சி படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த தீபாவளிக்கு ‘விடாமுயற்சி’ படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர், மேலும் அஜித் நடித்துள்ள படத்தை பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Follow us on : click here