அக்டோபர் 30ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 500க்கு 346 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.
நகரின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 ஐத் தாண்டியுள்ளது. இது கடுமையான காற்று மாசுபாட்டை குறிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காற்றின் தரக் குறியீடு 60 க்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதாக தெரிவித்தது.
20 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான புது டெல்லி உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
மேலும் இந்தியாவின் மற்ற நகரங்களை விட அதன் தலைநகரில் தான் 10 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் இருக்கின்றன.
இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் இங்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
2013 ஆம் ஆண்டிலிருந்து உலகில், காற்று மாசுபாடு 59 சதவீதம் கூடியுள்ளது.
காற்று மாசுபாட்டால் இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தனர்.