கடுமையாக காற்று மாசு அடைந்த தலைநகரம்!!பள்ளி மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகமாக இருப்பதால், நவம்பர் 10ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளிகள் செயல்படாது என்று மாநில கல்வி அமைச்சர் கூறினார்.

பள்ளிகள் விருப்பப்பட்டால், 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான நிலை என்று கருதப்படுகிறது.

ஆனால் புதுடெல்லியில் நவம்பர் 5ஆம் தேதி அன்று காற்றின் தரக் குறியீடு 471 ஆக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆரோக்கியமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கும் இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காற்று மாசுபாட்டை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.