Singapore news

வருடத்தில் ஏழு நாட்கள் மட்டுமே செயல்படும் பேருந்து!

ஓர் ஆண்டில் 7 நாட்கள் மட்டுமே செயல்படும் பேருந்து சேவை உள்ளது.

சிங்கப்பூர் பூன் லே பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை 405, சுவா சூ காங், லிம் சூ காங் வட்டாரங்களுக்கு செல்லும்.

அது பயணிகளை இடுகாடுகளுக்கும், அஸ்தி மடங்களுக்கும் கொண்டு செல்லும்.

அந்த பயண சேவை Qing Ming பண்டிகை,புனித வெள்ளி, ரமடானின் முதல் நாள், நோன்பு பெருநாள், ஹஜ்ஜீப் பெருநாள், தீபாவளி,All Souls’ தினம் ஆகிய ஏழு நாட்களின் போது மட்டும் செயல்படும்.

குறிப்பிட்ட நாட்களில் மறைந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்த அது உதவுகிறது.

SBS Transit நிறுவனத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவின் ஓர் அங்கமாகவும், சிங்கப்பூர் மரபுடைமை விழாவின் ஓர் அங்கமாகவும் பொதுமக்களுக்கு பேருந்து சேவை 405-யின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அது சிங்கப்பூரின் புறநகர் பகுதிகளில் உள்ள உட்புற சாலைகளில் செல்லும்.

பேருந்தை இளம் ஆண் ஓட்டுநர்கள் மட்டுமே இயக்குவர். பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்து இயக்க அனுமதிக்கப்படுவதாக 8World News தெரிவித்தது.

காலை,மதிய நேரங்களில் மட்டுமே செயல்படும்.

பூன் லே பேருந்து முனையத்திலிருந்து காலை 7 மணிக்கு முதல் பேருந்து புறப்படும்.

மாலை 5 மணிக்கு கடைசி பேருந்து அங்கிருந்து புறப்படும்.

அதற்காகவே சில நிறுத்தங்கள் பேருந்து செல்லும் வழியில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

மற்ற பேருந்துகள் அந்த வழியில் செல்வதில்லை என்று 8World News தெரிவித்தது.