பங்களாதேஷின் சிட்டாகோங்கில் Fahim எனும் சிறுவன் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஒளிவதற்காக கப்பல் கொள்கலனுக்குள் சென்றுள்ளான்.
அப்போது அவனுக்கு உடல் அசதியாக இருந்துள்ளது. அதனால் அப்படியே தூங்கிவிட்டான். இந்த சம்பவம் ஜனவரி 11-ஆம் தேதி நடந்தது. கப்பல் கொள்கலனுக்குள் தூங்கிய சிறுவன் ஆறு நாட்களுக்கு பிறகு, சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.
அதாவது,கடந்த 17-ஆம் தேதி ஒரு வாரம் கழித்து மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் உடல் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான்.
அச்சிறுவனுக்கு காய்ச்சல் இருந்தது. மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் உடல்நிலை சீரானது.
இச்சம்பவத்தைக் குறித்து குடி நுழைவுத்துறை, மலேசியாவின் கடல் துறை காவல் படை, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மலேசிய அதிகாரிகள் சிறுவன் ஆள் கடத்தல் செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்தனர். முதலில் இவ்வாறு நினைத்தனர். சிறுவனைப் பற்றிய முழு விவரமும் பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அச்சிறுவனை அவனுடைய சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.