பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!!

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!!

கோலாலம்பூர்: 21 வயதுடைய இந்தோனேசியா பணிப்பெண் ஒருவர் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்ட அவலம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா நகரில் நிகழ்ந்துள்ளது

அந்த இல்லப் பணிப்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார்.

ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு பிரிவின்படி ஜூன் 9-ஆம் தேதி 5 மணியளவில் முதியாரா டமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த இல்லப் பணிப்பெண்ணுக்கு ஒரு தலையணை மற்றும் மெத்தை மட்டுமே கொடுத்து பால்கனியில் தங்க வைத்ததாக கூறினாள். அவள் அங்கே இருக்க வேண்டும் என்பதற்காக அவளை பால்கனியில் உள்ளே வைத்து பூட்டி போட்டதாக கூறப்படுகிறது.

இந்த துயரத்தில் இருந்து எப்படியாவது தன்னைக் காப்பாற்றி கொள்ள உதவிக்காக ஒரு கடிதம் எழுதி பால்கனியில் இருந்து தூக்கி எறிந்தார். அதன் பிறகே அந்த இல்லப் பணிப்பெண் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது.

அதிகாரிகள் அந்த இல்லப் பணிப்பெண்ணை மீட்டனர்.

அந்த இல்லப் பணிப்பெண் ஒரு வாரம் மட்டுமே அங்கு வேலை செய்ததாக அதற்கான சம்பளம் அளிக்கப்படவில்லை என்றும் அந்த இல்லப் பணிப்பெண் கூறினார்.