சாலை சந்திப்பில் நிலைத்தடுமாறி விழுந்த பைக்!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பைக் டிரைவர்!!
மே 14-ஆம் தேதி அன்று புக்கிட் பாடோக்கில் 31 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குள்ளானார்.
இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சந்திப்பில் திடீரென மோட்டார் சைக்கிள் சறுக்கியதால் நிலைத்தடுமாறி விழுந்தார்.
மோட்டார் சைக்கிள் தானாக சறுக்கியதால் இச்சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 8 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அவரை Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அந்த நபர் சுயநினைவுடன் இருந்தார்.
இச்சம்பவம் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து இருப்பதையும்,அதன் அருகே ஒரு குழந்தை, ஹெல்மெட் அணிந்து நின்று கோடனிருப்பதையும் காணலாம்.
சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் குறைந்தது 10 வயதுக்கு கீழ் இருக்கக்கூடாது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg