Grab எனும் தென்கிழக்காசியாவின் முதன்மைப் பயண, உணவு விநியோக செயலி நிறுவனம் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டது.
1000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இது அதன் ஊழியரணியில் 11 விழுக்காடு. அதனை தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
நீண்டகாலச் சேவைகளை வழங்கவதற்காகவும்,செலவினத்தை சமாளிப்பதற்காகவும் இந்நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறினார்.
தலைமை நிர்வாக அதிகாரி அந்தோணி டான் நேற்று அனுப்பிய கடிதத்தில் இது கோவிட்-19 தொற்று நோய் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய பணி நீக்கம் என்று கூறினார்.
ஆனால் இது லாபகரமான குறுக்கு வழி அல்ல மாறாக வணிக சூழலுக்கு ஏற்ப மறு கட்டமைப்பதை உத்தி என்றும் கூறினார்.
மாற்றம் இவ்வளவு வேகமாக இருந்ததில்லை என்று கூறினார்.AI செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் வளர்ச்சி அபாரமானது என்று குறிப்பிட்டார்.இது மூலதனச் செலவுகளை அதிகரித்துள்ளது.
இது போட்டித் தன்மையை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.