ஜூன் 30-ஆம் தேதி சிங்கப்பூர் சட்ட சங்கம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அந்த அறிக்கையில் SK குமார் சட்ட பயிற்சியில் இருந்து வழக்கறிஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தது.
ஏனென்றால்,அவர்களிடம் சிங்கப்பூரில் பயிற்சி செய்வதற்கான முறையான சான்றிதழ்களை வைத்திருக்கும் வழங்கறிஞர்கள் இல்லை.
அதோடு சிங்கப்பூர் சட்டப் பயிற்சி உரிமம் இல்லை.
Charles yeo என்பவர் SK நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களில் அடங்குவார்.
அவர்மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
SK குமார் சட்டப் பயிற்சியின்கீழ் பயிற்சி பெற்ற மற்றொரு வழக்கறிஞர் தன்வந்த சிங் என்பவருக்கு 2019-ஆம் ஆண்டில் $100,000 டாலர் விதிக்கப்பட்டது.
தேவையற்ற ஒத்திவைப்புகளை கோருவது, நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவது மற்றும் விசாரணைக்கு வராமல் இருப்பது போன்ற தவறான நடத்தைக்காக 2017-ஆம் ஆண்டில் SK குமார் தடை செய்யப்பட்டது.
சட்ட விஷயங்களுக்காக நிறுவனத்தையோ அல்லது நிறுவனத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படும் எவரையும் அணுக வேண்டாம் என்று பொதுமக்களிடம் Lawsoc அறிவுறுத்தியது.