வெளிநாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய நிர்வாகி!!

வெளிநாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய நிர்வாகி!!

வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக முன்னாள் செயலாக்க நிர்வாகியான சிங்கப்பூரரான Ho Chaik Hock Derrick க்கு 24 வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ் 61 குற்றச்சாட்டுகள் எடுத்து கொள்ளப்பட்டது.

அதில் 20 குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

நிறுவனத்தில் அவருக்கு கீழ் வேலை செய்த வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் வேலை அனுமதியை புதுப்பிக்கவும், தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு நபரிடம் இருந்து $1500 வெள்ளி முதல் $15500 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் 2016-ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை மொத்தம் 57 ஊழியர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளார். மொத்தம் சுமார் 396000 வெள்ளி வாங்கியதாக வழக்கு பதிவு செய்து குற்றஞ்சாட்டப்பட்டது.

இவரது குற்றச்செயல்கள் குறித்து நிறுவனத்திற்கு தெரியாது என்று அமைச்சகம் கூறியது.

ஊழியர்களிடம் இருந்து சட்டவிரோதமாக லஞ்சம் பெறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.